ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!
Tuesday, June 18th, 2019
நாடு முழுவதுமுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 44 Wi-Fi வலயங்கள் நிறுவப்படவுள்ளதுடன், அவற்றில் 22 Wi-Fi வலயங்கள் கொழும்பு மாவட்டத்தில் 14 ரயில் நிலையங்களில் நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், குறித்த இந்த திட்டத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கணை ரயில் நிலையம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 5 ரயில் நிலையங்களும் பதுளை மாவட்டத்தில் 5 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !
கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் - சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்ப...
எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பா...
|
|
|


