டெங்கு தொற்று – கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு பூட்டு!
Tuesday, June 18th, 2019
வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் டெங்கு நோய்க்கு உள்ளாகியமை காரணமாக நேற்று முதல் கொழும்பு கண் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வைத்தியசாலையில் 15 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் இந்தத் தீர்மானம் மருத்துவமனை செயற்குழுவினால் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த மருத்துவமனையில் நடைபெறவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைகளுக்கு தினம் குறிக்கப்பட்ட நோயாளர்களை களுபோவில மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக இதுவரை 47 ஆயிரத்து 866 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்...
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு - அமைச்...
|
|
|


