நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!
Wednesday, July 13th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடும் நடைபாதை வியாபாரிகள் பிரதேச சபைக்கு வரி செலுத்துவதில்லை.
எனவே, அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
நாடு பூராகவும் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படும் - சுகாதார அமைச்சு!
யாழ். மக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்!
தாய்ப்பால்: உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!
|
|
|


