சில பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!
Wednesday, June 12th, 2019
அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று(12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி இடங்களில் இருந்து அநுராதபுரத்திற்கு வரும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதற்காக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அநுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன. இந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது - சு...
போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகா...
எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை - கமத்தொழில் அமைச்சர் ம...
|
|
|


