பெற்றோல் விலை அதிகரிப்பின் எதிரொலி – முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு!
Wednesday, June 12th, 2019
பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்பட்டு வருகிறது. இதன்படி புதிய கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கும் என்று, அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.
அதேபோன்று, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கமும், கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதில்லை என்று அறிவித்துள்ளது.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
கால்நடை வளர்ப்புதுறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்...
அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் ...
|
|
|


