பாரதப் பிரதமரின் வருகையினை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!
Saturday, June 8th, 2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை 09ம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் கட்டுநாயக்க ௲ கொழும்பு அதிவேக பாதை, பேலியொகொடை மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் வரையும், பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பாபடுகள் அனைத்தும் நடைபெறும் - ப...
12 இலட்சம் விவசாயக் குடும்பங்களின் நலனுக்காக இலங்கைக்கு 8 பில்லியன் ரூபாவை வழங்கிகுகின்றது ஆசிய அபிவ...
|
|
|


