பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி – இதுவரை 2289 பேர் கைது!
Tuesday, June 4th, 2019
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தினத்திலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 2,289 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 1,665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வட மாகாண முதலமைச்சருக்கு சறுக்கினது சாட்டு!
சிறு குற்றங்களுக்கான அபராதம் புதிய முறையில் அறவிடப்படும் – ஜனாதிபதி!
நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் - வ...
|
|
|


