ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பை விரைவாக அமுல்ப்படுத்துமாறு கோரிக்கை!
Sunday, June 2nd, 2019
ஆசிரியர் சேவை புதிய பிரமாண குறிப்பு தொடர்பாக செயற்படுத்தப்பட வேண்டிய நடைமுறை குறித்த புதிய அறிவுறுத்தலை விரைவாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் பெற்றிருக்கும் கல்வித்தகைமையை ஆசிரிய சுய விபரக் கோவையில் உள்ளடக்கி பதவி உயர்வுகளை வழங்க முடியும். இதன் மூலம் சம்பள உயர்வை பெற முடியும்.
2014 இல் ஆசிரியர் சேவை யாப்புத் திருத்தம் வெளியாகிய நிலையில் 5 வருடத்துக்கு பின்னரே புதிய பிரமாணக்குறிப்பு மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டி புதிய அறிவுறுத்தல் வெளிவருகின்றது. எனவே காலதாமதப்படுத்தாது இவற்றை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோத்தாபய ராஜபக்சவை நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எனது ஆதரவும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும் - ஜனாதிபதி கோட்டபய ர...
காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!
|
|
|


