Thursday, May 23rd, 2019
விடுதலை செய்யப்பட்டார் ஞானசார தேரர் !
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலையாகி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர் இன்று பிற்பகல் 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் 19 வருட கடூழிய சிறைத்தண்டனை ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் , அதனை 6 வருடங்களில் அனுபவிக்கவும் இதன்போது நீதிமன்றம் உத்ரவிட்டிருந்தது.
இந்நிலையில் , ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ஞான சார தேரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் கைச்சாத்துடன் கூடிய உத்தரவு இன்று பிற்பகல் தனக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
அதன்படி , ஞானசார தேரர் இன்று பிற்பகல் 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை வளாகத்தில் இருந்து அவர் வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


