கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 23rd, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமார் 43 ஆயிரத்து 818 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதையும், இக் குடும்பங்களில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் 4 ஆயிரத்து 39 குடும்பங்களுக்கு இதுவரையில் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

இதன் காரணமாக மேற்படி குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. மேற்படி குடும்பங்களுக்கு மின்னிணைப்புகளை வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கையினை எடுக்க முடியுமா? ஏன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எப்போது இதனை மேற்கொள்ள முடியும்? இல்லை எனில், அதற்கான காரணம் என்ன? என்பதை அவர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா? இல்லையேல் ஏன்? ஏன்றும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் - ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் ...
இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய ...
மண்ணெண்ணையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் சீனா முன்வர வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...