வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்!
Wednesday, May 22nd, 2019
புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகளின் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பியிருந்தார்கள்.
எனினும் அவர்கள் தற்சமயம் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
பருத்திதுறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் உடனடி இடமாற்றம் - வைத்தியர் கமலநாதன் தற்காலிக...
உள்ளூராட்சி தேர்தல் - வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!
அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் 3 ஆம் தவணை விடுமுறை - பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு ...
|
|
|


