ஹெலிகொப்டர்கள் மூலம் வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
Wednesday, May 15th, 2019
வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாறே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்.
Related posts:
கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை!
நாளொன்றுக்கு உணவில்லாமல் 22 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழப்பு!
மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!
|
|
|


