மாணவர்களுக்கான TAB கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி !
Wednesday, May 8th, 2019
அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் வாராந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் மீண்டும் யோசனையாக முன்வைக்கப்பட்ட போது, இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமை ஒரு லட்சத்து 83 ஆயிரம் டெப் கருவிகள் மாணவர்களுக்காக வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
இந்தியா செல்ல தயாராகும் அமைச்சர் நாமல் ராஜபக்ச – 100 இற்கும் மேற்பட்ட பௌத்த மதகுருமாரும் விஜயம் என த...
இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை - துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபா...
|
|
|


