பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசேட மூவரடங்கிய விசாரணை குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Tuesday, April 30th, 2019
ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட மூவரடங்கிய விசாரணை குழு சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிற காரணிகள் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தகவல்களை அறிக்கையிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்த விசாரணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட , அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் அடங்குகின்றனர்.
Related posts:
இம்மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க தயார் - உலக சுகாதார ஸ்தாபனம் அறிவி...
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது - புடின்!
|
|
|


