பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை – கல்வி அமைச்சர்!
Friday, April 26th, 2019
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால், சுற்றிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பாடசாலை தரப்பினரை தெளிவுபடுத்தல், பாதுகாப்பு குழுவை நிறுவுதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை என்பன குறித்து இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அதிபர்கள், பிரதி அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன், பாதுகாப்புக் குழு மற்றும் உப குழுக்களை நிறுவுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மோசமடையும் காலநிலை : உயிரிழப்பு 13 ஆக உயர்வு ,85 ஆயிரம் பேர் நிர்க்கதி - மீட்பு உதவிப் பணிகள் தீவிரம...
பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
|
|
|


