வீதி சித்திரக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்?
Sunday, July 10th, 2016
இலங்கையில் உள்ள வீதிச் சித்திரக்கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு உள்ளுராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் தங்கள் படைப்புகளுடன் காத்திருக்கும் கலைஞர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் அடையாள அட்டை வழங்குமாறு உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு நகர ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல நேரங்களில் குறித்த சித்திர கலைஞர்கள் பொலிஸாரினால் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த கலைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்குமாறு தெரு சித்திர கலைஞர்களின் சங்கம் அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சமூக வலைத்தளங்களில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு : அரசாங்க அதிபரின் அவசர எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு - வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச...
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!
|
|
|
வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெர...
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? - அனைத்து ஊடகங்கள...
பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய...


