மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!
Wednesday, April 17th, 2019
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
திறமைசாலிகளை இழக்கப் போகும் ட்ரம்ப்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு - யுத்தம் வெல்லும் வரை போரை நிற...
நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவியேற்பு!
|
|
|


