மழை மற்றும் புழுதிப்புயல் – பாகிஸ்தானில் 26 பேர் உயிரிழப்பு!
Wednesday, April 17th, 2019
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தை தாக்கிய புயல், மழை, புழுதிப்புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பகதுங்கவா மாகாணங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்சார்ந்த விபத்துகளில் இன்றுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
புயலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கராச்சியில் மீனவர்கள், சிறுமிகள் உட்பட நான்கு பேர் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
சீனாவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு!
ஆட்சியமைக்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!
குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி!
|
|
|


