கொழும்பு – வவுனியா வரையான புகையிரதம் யாழ்ப்பாணம் வரை சேவையில்!

Thursday, April 11th, 2019

கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து பிற்பகல் 3.55 இற்கு புறப்படும் கடுகதி புகையிரத சேவை நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணம் சென்றடையும் குறித்த புகையிரம் நாளை மறுதினம்(13) அதிகாலை 3.00 மணிக்கு கொழம்பு நோக்கி புறப்படும் என புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் - யாழ். போதனா வைத்தியசாலைப் ப...
கல்குடா கல்வி வலயத்திற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்பபீட கட்டிட த...
நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகைய...