தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
Sunday, April 7th, 2019
நாடு முழுவதும் எதிர்வரும் 9ஆம் திகதி ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்சமாக 25,000 ரூபா அபராதத்தை அறவிடும் வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டமை உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த அபராதத் தொகை ஊடாக அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கமாக வாகனத்தை முந்திச் செல்லும் சட்டத்தை நீக்குதல் மற்றும், மேல் மாகாண பேருந்துகளுக்கு ஒரு நிறத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கான்ஸ்டபிள் சேவையில் பத்தாயிரம் வெற்றிடங்கள்!
இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - மாவட்ட அரச...
இன்றுமுதல் பகிரங்கப்படுத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம்...
|
|
|


