இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்!
Friday, April 5th, 2019
இன்று(05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று(05) நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.
இதேவேளை, வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
Related posts:
பண்டத்தரிப்பு பகுதியில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்தது வீடு !
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தக...
பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர...
|
|
|


