யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த பதவியேற்பு!
Tuesday, April 2nd, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் அவரது ஓய்வுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று மாலை பதவியேற்பு இடம்பெற்றது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
Related posts:
இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை தயாரிக்க நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!
விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் - புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் விசாரணை!
|
|
|


