அரிசியின் விலைகளைக் குறைக்க தீர்மானம்!

Monday, April 1st, 2019

சம்பா மற்றும் நாட்டரிசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக, அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள வகையில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் தற்போது காணப்படும் அரிசிக்கான விலை மேலும் குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts:

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உரு...
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பாக உடனடி விசாரணை - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவு!
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் ...