இ.போ.சபைக்கு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, March 28th, 2019
இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதுதொடர்பாக தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மலையகத்திற்கான சேவையில் ஈடுபடும் புகையிரதங்களுக்கான 75 பயணிகள் பெட்டிகளையும் 20 சரக்கு பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!
தொடரும் சீரற்ற வானிலை - 4,000 இற்கும்அதிகமானோர் பாதிப்பு!
|
|
|


