மின்சாரத் தடைக்கான காரணத்தை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!
Wednesday, March 27th, 2019
மின்சாரத் தடை தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்றுக் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தகுழுவில் அமைச்சர்களாக ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசீம் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கை மின்சார சபை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையே இந்த நிலைமைக்கான காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
தேசிய பாடசாலைகளை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !
சிறுமி ஹிஷாலினி மரணம்: ரிஷாட் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அடுத்தவாரம் குற்றப்பத்திரம் தாக்கல்!
|
|
|


