40 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் 09 பேர் கைது!
Thursday, March 21st, 2019
சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5.2 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டிருப்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர்.
சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடைய...
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 3...
2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
|
|
|


