உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கும்!
Sunday, March 17th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கு சமமாக உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என விவசாயம், கிராமப்புற விவகாரங்கள், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் பால் மா விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதிமுதல் இறக்குமதி பால் மா விலையை அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்முறையின் பிரதான சசூத்திரதாரி கைது!
நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி அறிவிப்பு!
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!
|
|
|
பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு எமக்கில்லை – ஜனாதிபதி ரணில்...
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ந...
இஸ்ரேலிய தாக்குதலுக்கு 'உடன் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான்...


