எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை – தனியார் பேருந்து சங்கம்!
Wednesday, March 13th, 2019
கடந்த 10 ஆம் திகதிமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில் –
“டீசல் விலையானது ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் பேருந்து தொழிலுக்கு தாக்கம் எதுவும் இல்லை.என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தான் பாவனைக்கு உகந்தது..” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை - பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எ...
தேசிய தொழிலதிபர்களை ஊக்குவிக்க கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
|
|
|


