மின்சார சபையினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
Monday, March 11th, 2019
தற்போது நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த காலநிலை காரணமாக நாளாந்த மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ரந்தெனிகல, ரன்டம்பே உள்ளிட்ட நீர்மின் உற்பத்திக்கான நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 39% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மட்டம் வீழ்ச்சியடைந்த போதிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அளவிற்கு இன்னமும் நிலைமை மோசமடையவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் ...
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்த இடமில்லை – ஜனாதிபதி அனுர!
|
|
|


