பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!
Saturday, March 9th, 2019
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்காக, ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.
பாதுகாப்பற்ற முறையில் பேருந்து செலுத்துதல், அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல் மற்றும் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. - அமைச்சர் ஜனக பண்டார !
ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!
|
|
|
கிழக்கு மாகாண மக்களது நலன்களை விட்டுக்கொடுக்காது அக்கறையுடனேயே நாம் செயற்பட்டுவருகின்றோம் - ஈ.பி.டி....
உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை - விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!
தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்ன...


