ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றது!
Monday, March 4th, 2019
ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த 09 மாதங்களுக்கு பின்னரே இலங்கைக்கு முழு உறுப்புரிமை கிடைத்துள்ளது.
உரிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் இடம்பெறாமை காரணமாக இலங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்காணிப்பு மட்டத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வின்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறி...
பொதி உறை அல்லது கொள்கலன் மீது சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் - நுகர்வோர் விவக...
உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


