வான் எல்லையில் பதற்றம் : ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு!

Thursday, February 28th, 2019

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்தப் பதற்ற நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பல விமான சேவைகள் பாகிஸ்தானுக்கான தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, எமிரேட்ஸ், கட்டார் விமான சேவை, எத்திஹாட் பிளே டுபாய், கல்ப் எயார், எயார் கனடா ஆகிய விமான சேவைகள் தங்கள் விமான பயணங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்த விமான எல்லை மூடப்பட்டமையினால் இதற்கு மேலதிகமாக பிரிட்டிஷ் எயார்வேஸ், சிங்கப்பூர் விமான சேவை, பின் எயார் மற்றும் எயார் இந்தியா விமான சேவைகள், ஐரோப்பா பயண எல்லைக்காக வேறு வழியை பயன்படுத்தியதாக நேற்று அறிவித்துள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் நோக்கி விமான பயணங்கள் மேற்கொள்ளும் சர்வதேச விமான சேவைகளுக்கு, பாகிஸ்தான் விமான எல்லையை தவிர்த்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிகமாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் மற்றும் பெங்கொக் விமான நிலையங்களில் தரையிறங்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலதிக செலவுகளை ஏற்க நேரிட்டமையினால் எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள நிலைமைகள் தொடர்பில் தீவிர அவதானத்தில் இருப்பதாக விமான சேவைகள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி எதிர்பார்த்த பாரிய அளவிலான விமான பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Related posts:

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது - அரசாங்க அதிபர் அருமை நாயகம...
திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு சட்டம் - பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வ...
மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பி...

மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய...
மதிய உணவுக்காக மாணவி ஒருவர் தேங்காய் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை - ஜனாதிபதி ஊடகப்ப...
ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை - நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன...