உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
Sunday, February 24th, 2019
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.
அதன்படி, கடந்த வாரத்தினுள் எண்ணெய் விலை நூற்றுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
ஒபெக் அமைப்பினால் எண்ணெய் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என நிலவும் எதிர்ப்பார்ப்பும் எண்ணெய் விலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளது.
அதன்படி , ப்ரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வார இறுதியில் 67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்! வர்த்தமானி அறிவித்தல்
யாழ்.மாவட்டத்திற்கு இன்னும் 25 ஆயிரம் வீடுகள் தேவை - அரச அதிபர் வேதநாயகன்.
கல்வி அமைச்சரிடம் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட கோரிக்கை!
|
|
|


