ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!

Sunday, February 24th, 2019

ரயில்களில் பெண்களுக்கு பிரத்தியேகமாக தனியான பெட்டிகளை ஒதுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, 6 அலுவலக ரயில்களில் பெண்களுக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.

சமுத்திராதேவி, சாகரிக்கா உள்ளிட்ட 6 அலுவலக ரயில்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், பெண்களுக்காக மாத்திரம் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் எழுந்த பிரச்சினைகள் காரணமாக அந்நடைமுறை கைவிடப்பட்டது.

Related posts:

தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை உடனடியாக கைது செய்யுங்கள் - நீதி அமைச்சர் அலி சப்ரி பொலி...
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
ஆகஸ்ட் மாதம்முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுக...

உயர்தர பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை பாடசாலைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
இந்து - பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா யாழ்ப்பாண...
13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் - ஐ.தே.க. உறுப்ப...