2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி அடுத்த மாதம்!

Thursday, February 21st, 2019

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை தேர்தல் திணைக்களம் அடுத்த மாதம் முன்னெடுக்கவுள்ளது.  இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவருக்கு இதுதொடர்பில் தொடர்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன் பின்னர், கிராம உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தி, வாக்காளர்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் தினம் மற்றும் ஏனைய தினங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.  2018ம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பு நடைபெறவுள்ள தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஜனாதிபதி உறுதியான தீர்வு முன்வைக்கும் வரை தொடர் வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும்: யாழ். பல்...
எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது - நெடுஞ...
செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சி - துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் க...