யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
Saturday, February 16th, 2019
யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார். இந்நிலையில் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே ரயில் சென்றது.
குறித்த ரயில் சாரதி சமயோசிதத்துடன் செயற்பட்டமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
Related posts:
போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையில் பாடசாலை மாணவர்கள்!
பொதுமக்கள் கவனக்குறைவாகச் செயற்பட்டால் கொரோனா நிலை மேலும் மோசமடையும் - பாடசாலைகளை மீண்டும் மூடவும் ந...
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைச...
|
|
|


