யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
Thursday, February 14th, 2019
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று இன்று மற்றும் நாளைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இடைக்கிடை ஏற்படக் கூடிய மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி செயலக படையணி மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களுடன் ஒன்றிணைந்து நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
Related posts:
நடப்பு ஆண்டுக்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையர் !
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை சட்டத்தரணிகள் சங்கத்தின் சுயாதீனத்தன்மையில் தங்கியுள்ளது - நீதி அமைச்...
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை தொழில் அ...
|
|
|


