மகள் படுகொலை – தந்தைக்கு தூக்கு!
Tuesday, February 12th, 2019
சித்திரவதைக்கு உள்ளாக்கி மகளைக் கொலை செய்த தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
மூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து அந்த நபருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம , ஹீரிகஸ்வெவ சம்பத்கமவைச் சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் இங்குருவத்த என்பவருக்கே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹீரிகஸ்வெவ சுதர்ஸனகம சம்பத்கமவில் சதுனிக்கா உபேக்ஸா லக்மாலி என்ற சிறுமியை பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொலை செய்தார் என்று சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Related posts:
பொருட்களை கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்வது சிரமம் - இறக்குமதியாளர்கள்!
வெளியானது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி!
சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...
எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக் கொள்ளுங்ள் - சீன வர்த்தகர்களுக்கு ஜன...
பறிக்கப்படும் தொழில் உரிமைகளை மீட்க வீதிக்கிறங்கும் பொருகாதார உத்தியோகத்தர்கள் - 26 அன்று மாபெரும் ஒ...


