வங்கிகளில் கணக்கு தொடர்பில் புதிய நடைமுறை!
Tuesday, February 12th, 2019
வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்தளவில் மீதியை பேணும் வங்கிக் கணக்குகளை நடாத்திச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமையே இதற்கான காரணம் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இடைநடுவில் பணம் வைப்புச் செய்தால் வழமை போன்று கணக்கு பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாரத பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!
விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் - மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்பட...
சுகாதார அமைச்சின் மருந்து கொள்வனவு மற்றும் சேவை தொடர்பில் ஆராய கோபா குழுவால் இரண்டு உப குழுக்கள் நிய...
|
|
|
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - கடந்த 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பிரிவ...
தமிழக மீனவர்கள் மீண்டும் அடாவடி - வடமராட்சி கடற்றொழிலாளர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்ட...
கல்வியியற் கல்லூரிகள் ஊடாக பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பான யோசனை குறித்து மதிப்பாய்வு - கல்வி அமைச்சர்...


