நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!
Monday, February 4th, 2019
இன்றைய தினத்தில் நாட்டின் மழை வீழ்ச்சியில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு , கிழக்கு , ஊவா , வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மத்திய, மேல் , சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
திருகோணமலைமாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் பகிஷ்கரிப்பு!
சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!
இலங்கை – இந்திய உறவானது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்தது - இலங்த்தீவின் 73 ஆவது சுதந்திர தின வாழ்த...
|
|
|


