வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் 41 வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு – 30 திட்டங்கள் நிறைவு என்கிறார் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் வீதிகள் புனரமைத்தல், வீதி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவற்றில் 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் ஏனைய 30 திட்டங்களும் நிறைவுபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
24 வீதி மற்றும் ஒழுங்கை புனரமைப்பில் 9 ஐ தவிர ஏனைய வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட தவிசாளர் சந்தை புனரமைப்பு, வீதி விளக்குகள் பொருத்தல், 25 வீட்டுத் திட்டத்திற்கு மின் இணைப்புக்கொடுத்தல், கடல் அரிப்பு தடுப்பணை உட்பட மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
மதத் தலங்களுக்கு அருகே இருக்கும் 6 மதுநிலையங்கள் இடமாற்றம் செய்யப் பரிந்துரை!
சகல அரச நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் - ஜனாதிபதி அவதானம்!
தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் A-9 பாதையில் நாளாந்தம் சோதனை - இன்றும...
|
|
|


