கடந்த ஒரு மாதத்தில் டெங்கு நோயால் 133 பேர் உயிரிழப்பு!
Friday, February 1st, 2019
இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட தற்போது 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது - உயர் தரத்தில் தமது பணியை பொது...
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் - மத்திய வங்கி...
|
|
|


