சுங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது!
Friday, February 1st, 2019
சுங்கப் பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று(01) மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தங்களது பிரச்சினைக்கு நிதி அமைச்சு உரிய தலையீட்டை மேற்கொள்ளாமையே, தொடர் போராட்டத்திற்கான காரணம் என சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம், சுங்க அதிகாரிகள் சங்கம், சுங்க உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான வழித்தடத்தினை அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்து!
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் - கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக...
|
|
|


