படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ் இறக்குமதி!
Wednesday, January 30th, 2019
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகையான விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைரஸை விவசாயத் துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் இன்று(30) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். வெலிகமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மூலம் படைப்புழுவை அழிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சேனா படைப்புழுவினை அழிக்கக்கூடிய 4 வகையான பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எஸ்.எஸ். வெலிகமகே தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் குடிவரவு, குடியகல்வு சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - ஜனாதிபதி!
இலங்கையில் மாலைத்தீவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை !
பெல்ஜியத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ள கப்பலில் மூவர் மரணம்!
|
|
|


