தொல்பொருள் உள்ள இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டம்!
Wednesday, January 30th, 2019
தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பில் காணப்படும் சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்த விரும்புகின்றோம் – மஹிந்த தேசப்பிரிய
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்க...
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைப்பு!
|
|
|


