பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய இணையத்தளம் அறிமுகம்!
Saturday, January 26th, 2019
இணையத்தளமூடாக பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.npc.gov.lk என்ற முகவரிக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
பதிவு செய்யும் முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.எச். மனதுங்க குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐ. நா.சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்!
அரசாங்கத்தை எச்சரித்துள்ளது மருத்துவ நிபுணர்கள் பேரவை!
மோட்டார் வாகன இறக்குமதி - சுங்க இறக்குமதி வரி மீதான 50% கூடுதல் வசூலிப்பு டிசம்பர் 31வரை நீடிப்பு!
|
|
|


