யாழ். போதனாவில் மீண்டும்  “பாஸ்” நடைமுறை!

Saturday, January 26th, 2019

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான பாஸ் நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று யாழ் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையில் பாஸ் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாகவே பாஸ் நடைமுறையை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் பாஸ் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆயிரத்து 250 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இவ்வாறிருக்கையில் ஒரு நோயாளரைப் பார்வையிடுவதற்காக அதிகமானோர் வருவதால் சேவைகள் சிறந்த முறையில் முன்னெடுப்பதில் சிரமம் நிலவுகிறது. இதனடிப்படையிலேயே பாஸ் நடைமுறை மீண்டும் கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:


அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் ...
புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் - கைத்தொழில...
அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில...