மின்கம்பத்துடன் மோதி பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து!
Friday, January 25th, 2019
காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக உள்ள மின்கம்பத்துடன் பிரதேச செயலாளரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காரைநகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகனத்திற்கு முன்பாக நாய் ஓடியதால் சாரதி வாகனத்தை வீதிக்கு அடுத்த பக்கம் திருப்பியுள்ளார்.
இதன் போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக இருந்த மணல் சறுக்குண்டு வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் வாகத்தின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்தது.
இதில் வாகனத்தில் பயணித்த பிரதேச செயலாளர் மற்றும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக ஏழு விமானங்கள்!
சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோபா கு...
இன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் - நாட்டில் நாளாந்தம் 55 பேர் மரணத்தைத் தழுவுவதாக மதுசாரம் ...
|
|
|


