சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Monday, January 21st, 2019
தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் மேலதிக பொலிஸ் மா அதிபர் பலி!
தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல்!
|
|
|


