படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!
Saturday, January 19th, 2019
படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச்செய்கையையே அதிகம் பாதித்துள்ளது. சோளத்தைத் தொடர்ந்து கீரி சம்பாவை அதிகம் தாக்கியுள்ளது.
இனி ஏனைய பயிர்ச் செய்கைகளையும் இது பாதிக்கலாம். இது தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக நெற் செய்கை பாதிக்கப்படலாம்.
இந்த அழிவு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பிலும் இரண்டு கிழமைகளுக்குள் விவசாயிகளை அறிவுறுத்துவதற்கும் இந்த அழிவு தொடர்பில் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் எம்.டபிள்யூ.வீரக்கோன் தெரிவித்தார்.
Related posts:
இன்புளுயன்சா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பில் பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இ...
பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


